இரகசியமாக சவுதி இளவரசரை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்?

இரகசியமாக சவுதி இளவரசரை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்?

இஸ்ரேல் பிரதமர் நெட்ரன்யாஹூ (Benjamin Netanyahu) இரகசியமாக சவுதி சென்று அந்நாட்டு இளவரசர் Mohammed bin Salman னை சந்தித்து உள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அச்செய்திகள் உண்மை என்றால், பரம எதிரிகளான இருபகுதியும் உறவாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.

ஆனாலும் சவுதி தரப்பு அவ்வாறு சந்திப்பு இடம்பெறவில்லை என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு முதலில் மேற்படி செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. பின்னர் இஸ்ரேலின் கல்வி அமைச்சர் Yoav Gallant சந்திப்பதை உறுதி செய்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் Netanyahu, சவுதி இளவரசர் bin Salman, அமெரிக்க வெளியுறவு செயலாளர் Pompeo ஆகியோர் இந்த இரகசிய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.

மேற்படி சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை செங்கடல் கரையோரம் உள்ள Neom என்ற நகரம் இஸ்ரேல், எகிப்த் எல்லையோரம் அமைக்கப்படும் புதியதோர் சவுதி நகரமாகும். இந்நகரம் 2017 ஆம் ஆண்டு bin Salman னின் விருப்பப்படி ஆரம்பிக்கப்பட்டது.

சியா, சுனி ஆகிய இஸ்லாமிய வேறுபாட்டை பயன்படுத்தி சுனி ஈரானுக்கு எதிராக சவுதி போன்ற சியா நாடுகளை அணி திரட்டுவதே இஸ்ரேலின் பிரதான நோக்கம். அதற்கு ஏற்ப அமெரிக்காவும் செயற்படுகிறது.