நியூசிலாந்து பள்ளிவாசல்களில் சூடு, 49 பேர் பலி

NewZealand2

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 1:30 மணியளவில், துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளன. Al Noor மற்றும் Linwood பள்ளிவாசல்களிலேயே மேற்படி சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
.
இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் குறைந்தது 49 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
.
அதேவேளை போலீசார் தாம் 3 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கூறி உள்ளனர். அஸ்ரேலியாவை சார்ந்த, 28 வயதுடைய, Brenton Tarrant என்பவரே இந்த தாக்குதல் செய்ததாக கூறப்படுகிறது.
.
பங்களாதேசத்தின் cricket அணி ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசல் ஒன்றில் இருந்துள்ளது. அந்த அணியினருக்கு பாதிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
.
இந்த சூட்டு நிகழ்வுகள் தாக்குதல்காரர்களால் Facebook மூலம் நேரடியாக ஒளிபரப்பட்டும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. Helmet camera மூலம் பதியப்பட்ட இந்த வீடியோவில் தாக்குதல்காரர் வாகனத்தில் வருவது, சுடுவது, மீண்டும் வாகனம் சென்று வேறு துப்பாக்கி எடுத்து மீண்டும் சுடுவது போன்ற காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

.