மரமது மரத்தில் ஏறி

மரமது மரத்தில் ஏறி

க. நீலாம்பிகை

பாடல்:
மரமது மரத்தில் ஏறி மரமதினூடே சென்று மரத்தினால் மரத்தைக்கொன்று வளமனைக்கேகும் மரமதைக்கண்ட மாந்தர் மரமொடு மரமேடுத்தார்.

பல கருத்து சொற்கள்:
அரசு= அரச மரம், அரசன்
மா= மாமரம், குதிரை
வேல்= வேலமரம், வேல் ஆயுதம்
வேங்கை= வேங்கை, வேங்கை மரம்
ஆல்= ஆல மரம், ஆலாத்தி
அத்தி= அத்தி மரம்

விளக்கம்:
அரசன் குதிரையில் ஏறி, காட்டின் ஊடு சென்று வேலினால் வேங்கையை கொன்று வளம் பொருந்திய அரண்மனைக்கு ஏகிய போது அரசை கண்ட மக்கள் ஆலாத்தி (ஆல்+அத்தி) எடுத்தனர்.