இலங்கைக்கான கனடிய தூதுவர் கண்காணிப்பில்?

இலங்கைக்கான கனடிய தூதுவர் கண்காணிப்பில்?

இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon தான் இலங்கையின் கண்காணிப்பில் உள்ளேனா என்று கேள்வி ஒன்றை விடுத்துள்ளார். அண்மையில் அவர் Tareq Ariful Islam என்ற இலங்கையில் உள்ள பங்களாதேசத்தின் தூதுவருடன் தனிப்பட்ட முறையில் கதைத்து உள்ளார். Colombo 7 இல் உள்ள Canada House நிலையத்தில் இடம்பெற்ற இந்த உரையாடல் பகிரங்கம் செய்து இருக்கப்படவில்லை.

ஆனால் The Island செய்தி நிறுவனம் இந்த உரையாடலை மார்ச் மாதம் 3ம் திகதி பகிரங்கம் செய்துள்ளது. The island எவ்வாறு மேற்படி உரையாடலை அறிந்தது என்பதே கனடிய தூதுவரின் கேள்வி.

இலங்கைக்கு எதிரான வரைபுக்கு ஐ.நாவில் (UNHRC) ஆதரவு தேடும் நோக்கிலேயே கடனடிய தூதுவர் பங்களாதேச தூதுவருடன் உரையாடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் Sarah Hulton அண்மையில் தென்கொரிய தூதுவருடன் (Woonnjin Jeong) இவ்வகை உரையாடல் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.

மொத்தம் 47 உறுப்பினர்களை கொண்ட UNHRCரின் ஆசிய-பசுபிக் அணியில் பங்களாதேசமும், தென்கொரியாவும் அங்கம்.

பிரித்தானிய, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் உட்பட்ட Core Group on Sri Lanka குழு தமது இறுதி வரைபை (zero draft) பெப்ருவரி 24ம் திகதி UNHRC சபையில் சமர்ப்பித்து இருந்தது. தற்போதைய UNHRC அமர்வு மார்ச் மாதம் 23ம் திகதி வரை நடைபெறும். இலங்கைக்கான வரைபை வாக்கெடுப்புக்கு விடும் தீர்மானம் இதுவரை செய்யப்படவில்லை.