இலங்கைக்கு இந்தியா $450 மில்லியன் கடனுதவி

SriLanka_India

இலங்கை சனாதிபதியின் இந்திய பயணத்தின்போது இலங்கைக்கு இந்தியா $450 மில்லியன் கடனுதவி (line of credit) வழங்க முன்வந்துள்ளது. இலங்கையின் சனாதிபதியான கோத்தபாயா ராஜபக்ஸ தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா சென்றபோதே இந்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
.
மேற்படி கடனுதவியில் $400 மில்லியன் உள்நாட்டு கட்டுமான வேலைப்பாடுகளுக்கு வழங்கப்படும். மிகுதி $50 மில்லியன் இலங்கையின் பாதுகாப்பு வேலைப்பாடுகளுக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்பை இந்திய பிரதமர் மோதி வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார்.
.
ஏற்கனவே அறிவித்த இன்னோர் $100 மில்லியன் கடனுதவி சூரிய சக்தி (solar power) வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.
.
இந்திய-இலங்கை உறவை தான் “very high level” அளவுக்கு உயர்த்த விருப்புவதாக கோத்தபாய கூறியுள்ளார்.
.