இலங்கைக்கு IMF $1.5 பில்லியன் கடனுதவி

IMF

இலங்கைக்கு $1.5 பில்லியன் ($1,500,000,000) கடன் உதவி செய்ய IMF முன்வதுள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு பிரதியுபகாரமாக இலங்கை வரிகளை அதிகரித்து வரிமூலமான வருமானத்தை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் இழப்புகளில் மூழ்கியுள்ள அரச கூட்டுத்தாபனங்களையும் திருத்தி அமைக்க அரசு இணங்கியுள்ளது.
.
இணங்கியுள்ளபடி VAT (value-added tax) 12% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டளவில் இலங்கை அரசால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி இலங்கை GDPயின் 10.8% ஆக இருந்துள்ளது. ஆனால் அதை 2020 ஆம் ஆண்டளவில் 15% ஆக உயர்த்த அரசு முனைகிறது.
.

இந்த கடன் உதவியின் பெரும் பாகம் உலகவங்கி மற்றும் Asian Development Bank ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெறும்.
.