இலங்கையில் 15,000 ஏக்கரை எதிர்பார்க்கிறது சீனா

SriLanka

இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா 15,000 ஏக்கர் நிலத்தை (சுமார் 60 சதுர கிலோமீட்டர்) எதிர்பார்க்கிறது. இந்த பொருளாதார (special economical zone) நடவடிக்கை சுமார் 1 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
.
சீனா கருத்தில் கொள்ளும் இடம் இலங்கையின் தெற்கே உள்ள Hambantotaவை அண்டிய பகுதியாகும். இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம், துறைமுகம் என்பற்றை பயன்படுத்தக்கூடியதாக இந்த பொருளாதார மையம் அமையும்.
.
சீனாவே இந்த பொருளாதார மையத்தின் முன்னணி அங்கமாகினும் இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளும் இங்கு மேற்கொள்ளப்படலாம்.
.
அடுத்த மாத இறுதியில் (August) இலங்கை தனது தேசிய வர்த்தக கொள்கைகளை வெளியிடும் என்றும் அதில் இலங்கையின் சீனா, இந்தியா மற்றும் மேற்கு போன்ற நாடுகளின் மீதான அணுகுமுறைகள் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
.