இலங்கையில் Cricket match-fixers, Al Jazeera விபரிப்பு

Cricket

இலங்கையில் இடம்பெறும் cricket விளையாட்டு போட்டி முடிபுகளை தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்து பெரும் பணத்தை சட்டவிரோத குழுக்கள் பெறுவதாக Al Jazeera என்ற கட்டார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் இரகசியமாக பதிவு செய்த video படங்கள் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளன.
.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இலங்கை-இந்தியா போட்டியும், அதே வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை-அஸ்ரேலியா போட்டியும் இவ்வாறு ‘fix’ செய்யப்பட்ட போட்டிகள் என்று கூறுகிறது அல்ஜஷீரா. இந்த இரண்டு போட்டிகளும் காலி விளையாட்டு மைதானத்தில் (Galle International Stadium) இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
.
இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள இலங்கை-இங்கிலாந்து போட்டியை “fix’ செய்யும் பணிகளும் இடம்பெற்று வருவதாக அல்ஜஷீரா கூறுகிறது. இந்த விடயத்தை International Cricket Council தற்போது விசாரணை செய்துவருகிறது.
.
Robin Morris என்ற இந்தியாவின் மும்பாய் நகர fixer தான் காலி மைதான அதிகாரிகளுக்கு பணம் வழங்கி, pitch மேற்பரப்பை விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து போட்டியின் முடிவை fix செய்ததாக கூறியுள்ளார்.
.
காலி மைதான அதிகாரியான Tharanga Indika “If you want a pitch for spin bowling or pace bowling or batting, it can be done” என்று கூறுவதை அல்ஜஷீரா படம் பிடித்துள்ளது.
.
இந்த தொலைக்காட்சி பின்வரும் நாட்களில் அல்ஜஷீராவில் Crciket’s Match-Fixers என்ற தலைப்பில் ஒளிபரப்பு செய்யப்படும்:
Sunday, May 27 20:00GMT
Monday, May 28 12:00 GMT
Tuesday, May 29 01:00 GMT
Wednesday, May 30 06:00 GMT
Thursday, May 31 12:00 GMT
Friday, June 1 20:00 GMT
Saturday, June 2 01:00 GMT
Sunday, June 3 06:00 GMT
.