இலங்கை கடனுக்கு IMF இதுவரை தீர்மானம் இல்லை

இலங்கை கடனுக்கு IMF இதுவரை தீர்மானம் இல்லை

இலங்கை வந்திருந்த International Monetary Fund (IMF) அதிகாரிகள் 10 நாட்கள் பேச்சுக்களை கொண்டிருந்தாலும் இலங்கைக்கு கடன் வழங்கும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. பேச்சுக்கள் நலமாக (constructive) இடம்பெற்றன என்று வியாழன் கூறி இருந்தாலும், மேலும் உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது IMF.

மேலதிக பேச்சுக்கள் இணையம் மூலம் தொடரும் என்றும் IMF கூறி உள்ளது. இக்காலத்தில் staff-level இணக்கம் கொண்டு இணக்கத்தை நடைமுறை செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். அதன் பின்னரே IMF அமைப்பின் Executive Board கடனை வழங்க அனுமதி வழங்கும்.

Staff-level இணக்கம் அரசு நடைமுறை செய்ய தேவையான திட்டங்களை தவறாது நடைமுறை செய்வதை உறுதி செய்யும். இலங்கைக்கு கடன் வழங்கியோரும் இந்த இணக்கத்துக்கு உட்படல் அவசியம். அது ஒரு சிரமான காரியம். கடன் வழங்கிய சில அமைப்புகள் ஏற்கனவே நீதிமன்றம் சென்றுள்ளன.

மேற்படி IMF செய்தியின் பின் இலங்கையின் சர்வதேச bond கடன் மேலும் 4.3% ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. 2025ம் ஆண்டுக்கான bond தற்போது சுமார் ஆரம்ப தொகையின் (face value) 33% பெறுமதியை மட்டுமே கொண்டுள்ளது.

தற்போது இலங்கையில் நுகர்வோர் பொருட்களின் விலை (inflation) சுமார் 55% ஆக உள்ளது.