இஸ்ரவேலுக்கு $38 பில்லியன் இராணுவ உதவி

USAid

இஸ்ரவேலுக்கு, 2017 முதல் 10 ஆண்டுகளில், $38 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா இணங்கி உள்ளது. வருடாந்தம் அமெரிக்கா இஸ்ரவேலுக்கு பெரும் இராணுவ உதவியை வழங்குவது வழமை. ஆனால் அமெரிக்கா தனது இராணுவ செலவுகளை குறைத்து வரும் இக்காலத்திலும், இஸ்ரவேலுக்கான இராணுவ உதவியை வருடாந்தம் அதிகரித்தே வந்துள்ளது.
.
கடந்த 10 வருடங்களாக வருடாந்தம் $3.1 பில்லியன் உதவி வழங்கி வந்த அமெரிக்கா, அதை அடுத்த 10 வருடங்களுக்கு $3.8 பில்லியன் ஆக உயர்த்தி உள்ளது.
.
இந்த உதவியின் 26% பங்கு இஸ்ரவேல் நிறுவனங்களால், இஸ்ரவேலில் தயாரித்த இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தப்படும். ஏனையவை பெரும்பாலும் அமெரிக்க தளபாடங்களை கொள்வனவு செய்ய பயன்படும். இந்த நிபந்தனை முதல் 5 வருடங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
.
இந்த பணத்தில் இஸ்ரவேல் புதிய F-35 யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்யும்.
.
அமெரிக்கா உதவிக்கு அப்பால் கடந்த வருடம் இஸ்ரவேல் $16 பில்லியன் அளவில் தனது பணத்தையும் இராணுவத்தில் செலவு செய்திருந்தது.
.