இஸ்ரவேலை கைவிடும் ஐரோப்பியம்

Palestine

மிக நீண்ட காலமாக இஸ்ரவேலை கண்மூடித்தனமாக ஆதரித்து வந்த ஐரோப்பியம் மெதுவாக பாலஸ்தீனியர் பக்கம் ஆதரவை செலுத்த ஆரம்பித்துள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது இஸ்ரவேல்.
.
அமெரிக்கா உட்பட மேற்கின் அதியுயர் அரசியால் மற்றும் பத்திரிகை துறைகளை இஸ்ரவேல் ஆதரவு குழுக்கள் தமது கடுப்பாட்டில் நீண்டகாலமாக வைத்திருந்தன. அந்த ஆதரவின் பலத்துடன் தமக்கு வேண்டியது எல்லாவற்றையும் இஸ்ரவேல் நியாயமின்றி நிறைவேற்றியும் வந்து. இந்நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்படாவிடினும், மேற்கின் சாதாரண மக்கள் மத்தியில் இஸ்ரவேல் வெறுப்புக்குள்ளாகி வருகின்றது.
.
இன்று (2014-11-18) இஸ்பெயின் நாட்டு பாராளுமன்றம் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆதரிப்பதற்கு ஒரு வாக்கெடுப்பை நடாத்தியிருந்தது. அப்போது 319 ஸ்பெயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளனர். இந்த வாக்களிப்பு ஒரு சட்டமாக கருதப்படாவிடினும், இவ்வகை ஆதரவு இஸ்ரவேலுக்கு பாதகமானது என்பதில் ஐயமில்லை.
.
கடந்த மாதம் (October) சுவீடன் சட்டப்படி பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டிருந்தது. சுவீடனே பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்கொண்ட முதலாவது மேற்கு ஐரோப்பிய நாடு. இதனால் ஆத்தரம் அடைந்த இஸ்ரவேல் தனது தூதுவரை சுவீடனில் இருந்து திருப்பி அழைத்திருந்து.
.
பிரித்தானியாவும் இவ்வாறு ஒரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. அப்போது 274 MPகள் ஆதராவாகவும், 12 MPகள் எதிராகவும் வாக்களித்து இருந்தனர்.
.
வரும் 28 ஆம் திகதி பிரான்சும் இவ்வாறு ஒரு வாக்கெடுப்பை நடாத்த உள்ளது.
.

மேற்கு நாடுகளுக்கு அப்பால் சுமார் 130 நாடுகள் பாலதீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன.