ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

இந்தியாவின் Neeraj Chopra இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஈட்டி எறிதல் விளையாட்டில் (javelin) தங்க பதக்கம் பெற்றுள்ளார். Tokyo 2020 போட்டியில் இவர் ஈட்டியை 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை அடைந்து உள்ளார்.

Neeraj Chopra, வயது 23, ஒரு இராணுவத்தினர். இவர் இந்தியாவின் Rajputana Rifles என்ற இராணுவ அணியில் உள்ளார்.

இதுவே இந்தியாவின் முதல் ‘athletics’ தங்க பதக்கமாகும். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 தங்க பதக்கங்களை வென்று இருந்தாலும், அவை filed hockey, குறிபார்த்து சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கே கிடைத்தன.

இதற்கு முன் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்க பதக்கத்தை குறிபார்த்து சுடுதலுக்கு பெற்று இருந்தது. அதற்கு முன் 1980ம் ஆண்டு இந்தியா தங்க பதக்கத்தை field hockey விளையாட்டுக்கு பெற்று இருந்தது. 1900ம் ஆண்டில் Norman Pritchard என்ற பிரித்தானியர் இந்தியா சார்பில் athletic விளையாட்டில் வெள்ளி பதக்கம் பெற்று இருந்தார்.