ஈரானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

Syria

சிரியாவின் தென் பகுதியில் ஆயுதங்கள் பெருத்தப்பட்ட நிலையில் பறந்த ஆளில்லா வேவு விமானம் ஒன்றை இன்று செவ்வாய் அமெரிக்காவின் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவின் அரசுக்கு ஆதரவாக பறந்த ஈரானின் Shaheed-129 என்ற ஆளில்லா விமானமே அமெரிக்காவின் F-15 வகை யுத்த விமானதால் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
.
மேற்படி ஆளில்லா விமானம் தமது அணிக்கு பயமுறுத்தலாக செயல்பட்டதால், உள்ளூர் நேரப்படி செவ்வாய் அதிகாலை 12:30 மணியளவில், சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க படை கூறியுள்ளது.
.
இந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதி Tanf என்ற சிரியா-ஜோர்டான் எல்லைப்பகுதியாகும். இப்பகுதியில் அமெரிக்கா தலைமயிலான அரசுகள் தமக்கு சார்பான உள்ளூர் குழுக்களுக்கு இராணுவ பயற்சி  வழங்குகின்றன.
.
மீண்டும் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தாம் சிரியாவுடனோ அல்லது ரஷ்யாவுடனோ மோதலை விரும்பவில்லை என்றும், ஆனால் தமக்கு அச்சுறுத்தல் இடம்பெறின் தாம் தாக்குதல் செய்வோம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.

ரஷ்யாவின் எச்சரிக்கையின் பின் ஆஸ்திரேலியா தமது யுத்த விமானங்கள் சிரியாவின் மேல் பறப்பதை நிறுத்தி உள்ளது.
.