ஈரானுக்கு Antey-2500 ஏவுகணை விற்க ரஷ்யா தீர்மானம்

Antey-2500

ஈரானுக்கு தனது நவீன Antey-2500 ஏவுகணைகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. இந்த செய்தியை ரஷ்யாவின் இராணுவ தளபாட நிறுவனமான Rostec இன் தலைவர் தெரிவித்துள்ளார். தரையில் இருந்து வானத்துக்கு ஏவப்படும் இந்த ஏவுகணை 200 km தூரத்துக்கும் 30 km உயரத்துக்கும் சென்று தாக்கக்கூடியது. ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி இது நவீன யுத்த விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (drone) போன்றவற்றை தாக்கி அழிக்கக்கூடியது.
.
2010 ஆண்டில் ரஷ்யா ஈரானுக்கு S-300 ஏவுகணைகளை விற்க முன்வந்திருந்தும் பின்னர் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த விற்பனையை நிறுத்தி இருந்திருந்தது. அனால் கடந்த 5 வருடங்களில் அமெரிக்க-ரஷ்ய உறவு யுக்கிரைன் (Ukraine) விவகாரத்தால் மொத்தமாக முறிந்துள்ளது.
.
ஈரானின் அணு உற்பத்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தற்போது மேற்கு நாடுகள் ஈரானுடன் நடாத்திவரும் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் பலத்தை இந்த விற்பனை அதிகரிக்கும். அதனால் அமெரிக்கா, இஸ்ரவேல் தரப்பினர் கடும் விசனத்தை தெரிவித்துள்ளனர்.
.

இந்தியாவும் இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.