ஈரானுக்கு CIAயின் பொய் அணு அறிவு

StateOfWar

முன்னாள் CIA உறுப்பினரான Jeffrey Sterling இன்று அமெரிக்காவில் குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்பட்டுளார். 1993 CIAயில் இணைந்த இவர் 1997 பாரசீக மொழி பயிற்சியின் பின் ஈரான் சம்பந்தப்பட்ட உளவு பணியில் அமர்த்தப்பட்டார். இவரின் வேலை அமெரிக்காவில் உள்ள முன்னாள் ஈரான் வம்சாவளியினரை பயன்படுத்தி ஈரானின் அணு ஆராய்வு மற்றும் கட்டுமானங்களை அழிப்பதாகும்.
.

அதன் ஒருபடியாக CIA அமெரிக்கா பிரசையாகிவிட்ட முன்னாள் ரஷ்யா நாட்டு ஆணு வல்லுநர் ஒருவரை பயன்படுத்தி ஈரானின் அணு ஆய்வை குழப்புவதாகும். இந்த முன்னாள் ரஷ்ய பிரசை ஈரானுக்கு CIAஆல் கொடுக்கப்பட்ட ‘தவறான’ அணு ஆய்வு வரைபடங்களை உண்மையான வரைபடங்கள் என்று கொடுப்பதாகும். ஈரானுக்கு இந்த உண்மை தெரியாதுவிடின் அவர்கள் பல கோடி செலவழித்து தவறான அணுசக்தி கட்டுமானங்களை தொடங்கி இருப்பர்.
.
ஆனால் இந்த உண்மையை Jeffrey Sterling அமெரிக்காவின் New York Times பத்திரிகையாளர் James Risenக்கு கூறிவிட்டார். அந்த உண்மையும் அம்பலத்துக்கு வந்துவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அமரிக்க அரசு Jeffrey Sterling சட்டத்தின் முன் நிறுத்தியது. இன்று Jeffrey Sterling குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளார்.
.

James Risen இந்த உண்மையை State of War எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.