ஈரானை கைவிடலாம் பிரான்ஸின் Total

Total

ஒபாமா காலத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கையின் பின் ஈரான் மீதான பொருளாதாரா தடைகள் நீக்கப்பட்டு இருந்தன. அதற்கமைய பிரான்ஸின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் ஈரானில் $2 பில்லியன் முதலீட்டை செய்ய முன்வந்திருந்தது. ஏற்கனவே சுமார் $48 மில்லியன் தொகையை செலவிட்டும் உள்ளது.
.
ஆனால் தற்போது ரம்ப் ஈரான் உடன்படிக்கையில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுடன் இணைந்து செயல்படும் அமெரிக்கா நிறுவனங்கள் மட்டுமன்றி பிறநாட்டு நிறுவனங்களையும் தண்டிக்கவுள்ளது. அதனால் Total ஈரானில் இருந்து வெளியேற முனைகிறது. ரம்ப் அரசு தமக்கு விதிவிலக்கு அளிக்காவிடின் தாம் ஈரானில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை என்றுள்ளது Total.
.
ஈரானின் South Pars எண்ணெய் திட்டத்தில் (project) Total 50.1% உரிமையை கொண்டுள்ளது. சீனாவின் CNPC (Chinese National Petroleum Corp) 30% உரிமையை கொண்டுள்ளது. மிகுதி 19.9% உரிமை ஈரானிடம் உள்ளது.
.
Total ஈரானில் இருந்து வெளியேறினால் அதன் உரிமையையும் சீனாவின் CNPC பெற்றுக்கொள்ளலாம். மறுமுனையில் அது அமெரிக்காவுக்கு பாதகமாக அமையலாம்.
.
மேலும் Total நிறுவனத்தின் 90% முதலீட்டுக்கான கடன்கள் அமெரிக்க வங்கிகளாலேயே வழங்கப்படுகின்றன. Total நிறுவனத்தின் 30% பங்குச்சந்தை உரிமையாளர்களும் (shareholders) அமெரிக்கர்களே.
.