ஈரான் ஆதரவு குழுக்கள், அமெரிக்கா ஈராக்கில் மோதல்

Iran-Iraq

ஈரானின் ஆதரவுடன் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயற்படும் Kataib Hezbollah என்ற ஆயுத குழு மீது அமெரிக்க விமானப்படை நேற்று குண்டுகளை வீசி உள்ளது. இந்த குழு சில தினங்களுக்கு முன் செய்த ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கர் ஒருவர் இறந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.
.
அமெரிக்காவின் இந்த தாக்குதலை ஈராக் வன்மையாக கண்டித்து உள்ளது. ஈராக்கில் சில ஆயிரம் அமெரிக்க படைகள் தற்போதும் தங்கி உள்ளன. ஏற்கனவே உள்நாட்டு குழப்பங்களில் சிக்கி உள்ள ஈராக் அங்கு மேலதிக குழப்பங்களை விருப்பவில்லை.
.
ஈராக்கில் திடமான அரசு இல்லாத நிலையில் அங்கு நிலைகொண்டுள்ள அந்நிய படைகளும், ஆயுத குழுக்களும் அப்பகுதியை மீண்டும் ஒரு யுத்த களமாக்கலாம் என்று பயம் ஈராக்கியரை பிடித்துள்ளது.
.
நேற்று ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஓமான் கடலில் இராணுவ பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு இருந்தன. அதையும் அமெரிக்கா விரும்பவில்லை. வழமையாக அமெரிக்க ஆதரவு படைகள் இங்கு ஆதிக்கம் கொண்டிருந்தன.
.