ஈரான் மீதான தடைகள் நீக்கம்

PersianGulf

ஈரான் உட்பட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளும் கடந்த வருடம் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சனிக்கிழமை முதல் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடை நீக்கம் செய்யப்பட்ட அதேதினம் ஈரானும் அமெரிக்காவும் தம் கைவசம் இருந்த கைதிகளையும் விடுவித்துள்ளனர்.
.
இந்த தடை நீக்கத்தையிட்டு பெரும் கவலை கொள்ளும் நாடு இஸ்ரவேல். இஸ்ரவேலும் அதன் ஆதரவு அமெரிக்கர்களும் இந்த தடை நீக்கத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை வருடம் ஒன்றுக்கு $3 பில்லியனை பாதுகாப்புக்கு என பெற்றுவந்த இஸ்ரவேல் இப்போது அத்தொகையை $5 பில்லியன் ஆக்கும்படி கேட்கிறது.
.
இந்த தடை நீக்கம் அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட தடைகளுக்கு மட்டுமானதே. அணு ஆயுத விடயங்களுக்கு அப்பால் செய்யப்பட்ட தடைகள் இந்த நீக்கத்தில் அடங்கா.
.
தடை நீக்கம் காரணமாக தடை காலத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் $50 பில்லியன் பணமும் ஈரானுக்கு இப்போது கிடைக்கும்.
.