உலகின் முதல் 1% செல்வந்தர்களிடம் 82% வருமானம்

Oxfam

2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மொத்த வருமானத்தின் (wealth) 82% உலகின் முதல் 1% செல்வந்தர்களை அடைந்துள்ளது என்கிறது பிரித்தானியாவை தளமாக கொண்ட Oxfam என்ற அமைப்பு. அந்த அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில், உலகின் முதல் 1% செல்வந்தர்களின் சொத்துக்கள் சுமார் $762 பில்லியனால் அதிகரித்து உள்ளது.
.
அதேவேளை கடந்த வருடத்தில் உலகின் 50% மக்களின் சொத்துக்கள் எந்தவித அதிகரிப்பையும் அடையாது இருந்துள்ளது.
.
2017 ஆம் ஆண்டில் உலகில் மொத்தம் 2,043 பேர் $1 பில்லியனை அல்லது அதற்கு அதிகமான சொத்துக்களை கொண்டிருந்து உள்ளனர்.
.
உலகின் முதல் 42 செல்வந்தர்களிடம் உள்ள சொத்துக்கள், 3.7 பில்லியன் மக்களிடம் உள்ள சொத்துக்களுக்கு சமனானது என்கிறது Oxfam அறிக்கை.
.
அமெரிக்காவின் குறைந்த சொத்துக்களை கொண்ட 50% மக்களின் மொத்த சொத்துக்களுக்கு நிகரான சொத்துக்களை அமெரிக்காவின் முதல் மூன்று செல்வந்தர்கள் கொண்டுள்ளாராம்.
.
நாளை செவ்வாய் Davos என்ற சுவிஸ் நகரத்தத்தில் World Economic Forum இடம்பெற இருக்கையில், ஒருநாள் முன்னரேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
.