உலக அளவில் பலநூறு கடத்தல் செய்வோர் கைது

உலக அளவில் பலநூறு கடத்தல் செய்வோர் கைது

அமெரிக்கா, அஸ்ரேலியா, நியூ சிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட போலீஸ் நடவடிக்கைகளுக்கு பலநூறு போதை மற்றும் பணம் கடத்துவோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த செய்தியை மேற்படி நாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்து உள்ளன. 2018ம் ஆண்டு முதல் Operation Trojan Shield என்ற தலைப்பில் இரகசியமாக செயல்பட்ட நடவடிக்கைகளின் பயனாகவே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

அஸ்ரேலியாவில் 224 பேர் கைது செய்யப்பட்டு 104 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. நியூ சிலாந்தில் 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுவீடெனில் 70 பேரும், நெதர்லாந்தில் 49 பேரும் கைது செய்யப்பட்டனர். உலக அளவில் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் பல தொன் போதைகளும், 250 ஆயுதங்களும், $34 மில்லியன் பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளன. பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த கைதுகள் சுவீடெனில் இடம்பெறவிருந்த 10 கொலைகளையும் தடுக்க உதவின என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் FBI அதிகாரிகள் ANOM என்ற encryption செய்யப்பட்ட app ஒன்றை தயாரித்து அந்த app கொண்ட smartphone களை  பெரும் கடத்தல் புள்ளிகளுக்கு இரகசிய முகவர் மூலம் வழங்கி உள்ளனர். அந்த app தரத்தை அறிந்து மேலும் பல கடத்தல் புள்ளிகள் அதை பெற்று தம்முள் உரையாட ஆரம்பித்தனர். அந்த உரையாடல்கள் அனைத்தையும் போலீசார் ஒட்டு கேட்டுள்ளனர். அந்த தவுகளின் உதவியுடனேயே கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த app பொறியில் முதலில் வீழ்ந்தவர் Hakan Ayik என்பவரே. அதன் பின் 12,000 smartphones கடத்தல் கும்பல்களால் பெறப்பட்டன. அவற்றை சுமார் 100 நாடுகளில் உள்ள 300 கும்பல்கள் பயன்படுத்தின. பலர் அகப்பட்டாலும், Ayik அகப்படவில்லை. அவர் தற்போது துருக்கியில் வாழக்கூடும் என்று கருதப்படுகிறது.

சுமார் 9,000 போலீசார் இந்த இந்த கைது பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.