உல்லாச பயணத்தில் இலங்கை முதலிடத்தில்

LonelyPlanet

அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Lonely Planet என்ற உல்லாச பயணத்துறை  புத்தகங்கள், வழிகாட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் 2019 ஆண்டில் செல்லவேண்டிய முதலாவது நாடாக இலங்கையை தெரிவு செய்துள்ளது. இதனால் இலங்கைக்கான உல்லாச பயணிகள் வரவு 2019 ஆம் ஆண்டில் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
Lonely Planet இலங்கையை தெரிவு செய்தமைக்கு காரணங்களாக அழகிய கடற்கரைகள், சிறந்த உணவு வகைகள், தாராளமான இயற்கை, அனுராதபுரம், சிகிரியா உட்பட்ட புராதன நிலையங்கள், கணிசமான விலங்குகள், திமிங்கிலங்கள் ஆகியன உள்ளமையை குறிப்பிட்டுள்ளது.
.
உல்லாச பயண குழுக்களுடன் இணையாது, சுயாதீனமாக உல்லாச பயணங்களை மேற்கொள்ளுவோர் Lonely Planet போன்ற நிறுவன தரவுகளையே அதிகம் பயன்படுத்துவர்.
.
​2009 ஆம் ஆண்டில் சுமார் 440,000 உல்லாச பயணிகளே இலங்கைக்கு சென்றுள்ளனர். ஆனால் 2017 ஆம் ஆண்டில் சுமார் 2.1 மில்லியன் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளனர்.
.
இலங்கைக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் ஜெர்மனியும் (Germany), மூன்றாம் இடத்தில் சிம்பாப்வேயும் (Zimbabwe) உள்ளன.
.