ஊழலில் இலங்கை 91 ஆம் இடத்தில்

CPI_2017

இன்று Transparency International வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான Corruption Perception Index (CPI) கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 91ஆம் இடத்தில் உள்ளது.
.
இலங்கை 2012, 2013, 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 40, 37, 38, 37, 36 புள்ளிகளை பெற்று வந்துள்ளது.
.
2017 ஆண்டில் 89 புள்ளிகளை பெற்ற நியூ சீலாந்து 1ஆம் இடத்தில் உள்ளது. அதாவது உலகில் ஊழல் மிக குறைந்த நாடாக உள்ளது நியூ சிலாந்து. டென்மார்க் 88 புள்ளிகளை பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது.பின்லாந்து, நோர்வே, சுவிற்சலாந்து ஆகிய மூன்று நாடுகளும் 85 புள்ளிகளை பெற்று 3ஆம் இடத்தில் உள்ளன.
.
ஆசியாவிலே ஊழல் மிக குறைந்த நாடாக சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூர் 84 புள்ளிகளை பெற்று 6ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த ஊழல் குறைந்த இடமாக 77 புள்ளிகளை பெற்ற Hong Kong 13ஆம் இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவும் 13ஆம் இடத்திலேயே உள்ளது.
.
ஊழல் அதி கூடிய நாடாக 9 புள்ளிகளை மட்டும் பெற்ற somalia 180ஆம் இடத்தில் உள்ளது.

.