எகிப்தின் மோர்சி நீதிமன்றில் மரணம்

Egypt

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மோர்சி (Mohammed Morsi) இன்று நீதிமன்றில் மரணதாகியதாக எகிப்தின் அரசு அறிவித்து உள்ளது. 2013 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் உதவியுடன் இராணுவ ஆட்சியை அமைத்த சிசி (Sisi) மோர்சி மீது பல வழக்குகளை தொடர்ந்திருந்தார்.
.
மோர்சியின் கட்சியான Muslim Brotherhood மோர்சியின் மரணத்தை முழு அளவிலான படுகொலை (full-flesged murder) என்று கூறியுள்ளது.
.
சிறையில் இருந்த மோர்சிக்கு வைத்திய, மற்றும் சட்டத்தரணி உதவிகள் மறுக்கப்பட்டு வந்தன.
.
1951 ஆம் ஆண்டு பிறந்த மோர்சி அமெரிக்காவில் PhD வரை படித்தவர். 2012 ஆம் ஆண்டில் இவர் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.
.
துருக்கியின் ஜனாதிபதி Erdogan உடனடியாக மோர்ஸ் ஒரு தியாகி என்று கூறி அனுதாபம் தெரிவித்து உள்ளார்.

.