எட்டேகா லச்சணமே யேமனே றும்பரியே

எட்டேகா லச்சணமே யேமனே றும்பரியே

க. நீலாம்பிகை

கம்பன் ஔவையாரிடம், அவரை நையாண்டி செய்யும் நோக்கில் ‘அடி’ கலந்து, பின்வரும் பாடலின் அர்த்தம் கேட்டார்:
ஒருகாலடி நாலிலைப்பந்த  லடி

கம்பன் தன்னை ‘அடி’ என விழித்ததால் கோபம் கொண்ட ஔவையர் தனது விடைக்கு கம்பனை கடிந்து பாடிய பாடல்:
எட்டேகா லச்சணமே யேமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்ல வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

விளக்கம்:
எட்டு = அ, கால் = வ, எட்டேகால் = அவ
எட்டேகால் லச்சணம் = அவலச்சணமே
யமன் ஏறும் பரி = எருமை
பெரியம்மை = மூதேவி
பெரியம்மை வாகனம் = கழுதை
கூரையில்லா வீடே= குட்டிச்சுவரே
குலராமன் = ராமர்
குலராமன் தூதுவன் =அனுமர் = குரங்கே
ஆரை = நாலு இலை ஒரு தண்டு கொண்ட ஆரை என்ற கீரை

அவலச்சணமே, எருமையே, மூதேவியே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே நீ குறிப்பது நாலு இலைகளும் ஒரு தண்டு கொண்ட ஆரை என்ற கீரையை.