ஒரு நாளுக்கு மேலாக சிரியாவில் அமைதி

Syria

சிரியாவில் 2011 ஆம் ஆண்டில் வெளிநாடுகளின் ஆதரவுடன் ஆரம்பித்து அண்மை வரை தொடர்ந்த யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி பூட்டினும் இறுதியாக இணங்கி கொண்டதற்கு அமைய இந்த இருகிழமை யுத்த நிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு அமைதியை பேணுகிறது.
.
இந்த யுத்த நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் அங்கு அகப்பட்டு தவிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல வழி செய்வதே. ஐ.நா. கணிப்புப்படி குறைந்தது 30 இடங்கள் அவசர உதவிகளை எதிர்பார்த்து உள்ளன.
.
இந்த யுத்தத்துக்கு சுமார் 250,000 உயிர்கள் பலியாகி உள்ளன. அத்துடன் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெயர்ந்து உள்ளனர்.
.

இந்த யுத்த நிறுத்தம் சிரியாவின் அரச இராணுவத்துக்கும் மேற்கு சார்பு ஆயுத குழுக்களுக்கு இடையில் மட்டுமே கடைப்பிடிக்கப்படும். IS, Nusra Front போன்ற ஆயுத குழுக்களுக்கு எதிரான யுத்தம் தொடர்ந்து நடைபெறும்.
.