கடந்த ஆண்டும் வீழ்ச்சி அடைந்த சீன பிறப்பு

கடந்த ஆண்டும் வீழ்ச்சி அடைந்த சீன பிறப்பு

2021ம் ஆண்டும் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைந்து உள்ளது. அதேவேளை அங்கு முதியோர் தொகையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

2021ம் ஆண்டு சீனாவில் 10.62 மில்லியன் குழந்தைகளே பிறந்து உள்ளனர். இத்தொகை 2020ம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 11.5% ஆல் குறைவு.

அதேவேளை 2021ம் ஆண்ட அங்கு 267.36 மில்லியன் முதியோர், 60 வயதுக்கும் அதிகமானோர், அங்கு இருந்துள்ளனர். இத்தொகை 2020ம் ஆண்டு 264.02 மில்லியன் ஆக மட்டுமே இருந்தது. தற்போது சீனாவில் 18.9% மக்கள் முதியோர். இந்த வீதம் வேகமாக வளர்கிறது.

சீன அரசு 2 குழந்தைகள் வரை கொண்டிருக்க வசதியாக சட்டத்தை மாற்றினாலும் பிறப்பு வீதம் அங்கு அதிகரிக்கவில்லை.

முதியோர்கள் தொகை தொடர்ந்தும் அதிகரித்தால் சீனாவில் 2035ம் ஆண்டு அளவில் ஓய்வூதியம் பணம் இன்றியிருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.