கடந்த ஆண்டு $55.7 பில்லியனுக்கு இந்தியா தங்கம் இறக்குமதி

கடந்த ஆண்டு $55.7 பில்லியனுக்கு இந்தியா தங்கம் இறக்குமதி

2021ம் ஆண்டு இந்தியா $55.7 பில்லியன் பெறுமதியான தங்கத்தை (1,050 தொன்) இறக்குமதி செய்துள்ளது என்று கூறுகிறது அரச தரவுகள். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிலும் அதிகம்.

2020ம் ஆண்டு $22 பில்லியன் பெறுமதியான (430 தொன்) தங்கத்தை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்திருந்தது. 2011ம் ஆண்டு $53.9 பில்லியனுக்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. இதுவரை அத்தொகையே அதிகூடிய தொகையாக இருந்தது.

தங்கத்தின் விலை சிறிது வீழ்ச்சி அடைந்தமை, கரோனா காரணமாக பின்போடப்பட்ட திருமணங்கள் 2021ம் ஆண்டில் இடம்பெற்றமை ஆகியன காரணங்கள் என்று கருதப்படுகிறது.

2020ம் ஆண்டு 10 gram தங்கம் 56,191 இந்திய ரூபாய்கள் வரை உயர்ந்து இருந்தாலும், 2021ம் ஆண்டில் 43,320 இந்திய ரூபாய்களாக குறைந்து இருந்தது.