கட்டார் ஈரானுடன் மீண்டும் முழுமையான உறவு

Qatar

கட்டார் (Qatar) வெளியுறவு அமைச்சர் தாம் ஈரானுடன் மீண்டும் முழுமையான உறவை வைத்துக்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். கட்டாரின் இந்த தீர்மானம் சவுதி தலைமையிலான சுனி இஸ்லாம் அணிக்கு மேலும் ஒரு அடியாகவுள்ளது.
.
2016 ஆம் ஆண்டு கட்டார், சவுதியின் வேண்டுகளுக்கு இணங்க, ஈரானில் இருந்து கட்டாருக்கான தூதுவரை திருப்பி அழைத்திருந்தது. ஈரானுடனான தொடர்புகளையும் குறைத்து இருந்தது. ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது.
.
சுமார் 3 மாதங்களுக்கு முன் சவுதி தலைமையில் எகிப்து, UAE, Bahrain ஆகிய நாடுகள் கட்டார் மீது 13 நிபந்தனைகள் அடிப்படையில் தடை விதித்திருந்தன. அதில் Al-Jazera செய்தி நிறுவனத்தை மூடவேண்டும், ஈரானுடன் தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என்பனவும் அடங்கும். கட்டாருக்கு வழங்கி வந்திருந்த சேவைகளையும் சவுதி நிறுத்தி இருந்தது.
.
ஈரான் உடனே கட்டாருக்கு தேவையான மரக்கறி, பால் பொருட்களை விநியோகம் செய்தது.
.
1972 ஆம் ஆண்டு கட்டாரில் இருந்து விரட்டப்பட்டிருந்த அரச குடும்பத்தில் ஒருவரான Sheikh Ahmad bin Ali al-Thani என்பவர் வழிவந்தோரை சவுதி தற்போது வளர்க்க முனைகிறது. Sheikh Ahmad bin Ali al-Thani 1960 முதல் 1972 வரை கட்டாரை ஆண்டிருந்தார். பின்னர் இவர் தற்போதைய ஆட்சியாளரால் விரட்டிடப்பட்டு, லண்டனில் காலமாகி இருந்தார். Sheikh Ahmad bin Ali al-Thani வழிவந்தோர் ஒரு நாடுகடந்த அரசை சவுதியில் அமைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
.