கரோனாவால் அழியும் விமானசேவை நிறுவனங்கள்

AirAisa

கரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ளன துறை விமானசேவையே. விமான போக்குவரத்துக்கள் தடைப்பட, விமான சேவைகள் போதிய பயணிகள் இன்றி நட்டத்தில் இயங்க ஆரம்பித்தன.
.
Aeromexico என்ற மெக்ஸிக்கோ விமான சேவை இன்று முறிந்தது. முதலீட்டாளர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க Airmexico இன்று அமெரிக்காவில் Chapter 11 bankruptcy க்கு பதிந்து உள்ளது. 1934 ஆம் ஆண்டு Aeronaves de Mexico என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையில் தற்போது 68 விமானங்கள் உள்ளன. அத்துடன் இது மேலும் 58 விமானங்களை கொள்வனவு செய்யவும் இணங்கி இருந்தது.
.
ஒரு மாதத்தின் முன் Chile நாட்டை தளமாக கொண்ட LATAM விமானசேவையும் அமெரிக்காவில் Chapter 11 bankruptcy க்கு பதிந்து இருந்தது. LATAM சுமார் $18 பில்லியன் கடனில் உள்ளது. 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட LATAM தற்போது 139 விமானங்களை கொண்டது. அத்துடன் இது மேலும் 37 விமானங்களை கொள்வனவு செய்ய இருந்தது.
.
கொலம்பியாவை தளமாக கொண்ட Avianca விமானசேவை மே மாதம் Chapter 11 bankruptcy க்கு பதிவு செய்திருந்தது. Avianca தற்போது சுமார் $7.3 பில்லியன் கடனில் உள்ளது. இதனிடம் தற்போது 103 விமானங்கள் உள்ளன. இது மேலும் 115 விமானங்களை கொள்வனவு செய்ய இருந்தது.
.
அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Virgin Australia ஏற்கனவே bankruptcy க்கு பதிவு செய்துள்ளது.
.
இந்தியாவின் AirAsia விமான சேவையும் அழியும் நிலையில் உள்ளது. AirAsia மற்றும் Air India சேவைகள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கின்றன. ஆனால் மோதி அரசு தனியார் நிறுவனங்களுக்கு பணம் வழங்க விரும்பவில்லை. இந்தியாவின் Jet Airways மற்றும் Kingfisher விமான சேவைகள் கரோனாவுக்கு முன்னரே அழிந்து உள்ளன.
.
ஐரோப்பாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Airbus குறைந்தது 15,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கவுள்ளதாக நேற்று கூறி இருந்தது.
.