கரோனா தடுப்பு மருந்து வழங்களில் UAE முதலிடம்

கரோனா தடுப்பு மருந்து வழங்களில் UAE முதலிடம்

தமது மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாட்டில் எமிரேட்ஸ் (UAE) முன் உள்ளது. இங்கு தற்போது சுமார் 89% மக்கள் முதலாவது தடுப்பு ஊசியை பெற்றுள்ளனர். இங்கு இதுவரை மொத்தம் 8,559,291 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

இரண்டாம் இடத்தில் சிசெல்ஸ் (Seychelles) உள்ளது. இங்கு 66% மக்கள் முதலாம் ஊசியையும், 39% மக்கள் இரண்டாம் ஊசியையும் பெற்று உள்ளனர். இங்கு 102,080 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

மூன்றாம் இடத்தில் உள்ள பூட்டானில் 61% மக்கள் முதலாவது தடுப்பு ஊசியை பெற்று உள்ளனர். இங்கு 459,752 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

நாலாம் இடத்தில் உள்ள இஸ்ரேலில் 59% மக்கள் முதலாம் ஊசியையும், 54% மக்கள் இரண்டாம் ஊசியையும் பெற்று உள்ளனர். இங்கு  இதுவரை 10,071,823 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

ஐந்தாம் உள்ள பிரித்தானியாவில் 47% மக்களுக்கு முதலாவது ஊசியும், 7.8% மக்களுக்கு இரண்டாவது ஊசியும் ஏற்றப்பட்டு உள்ளன. இங்கு 36,631,187 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

ஆறாம் இடத்தில் உள்ள சிலேயில் (Chile) 37% மக்களுக்கு முதலாம் ஊசியும், 21% மக்களுக்கு இரண்டாம் ஊசியும் ஏற்றப்பட்டு உள்ளன. இங்கு 10,784,941 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

அமெரிக்காவில் 31% மக்கள் முதலாவது ஊசியையும், 18% மக்கள் இரண்டாவது ஊசியையும் பெற்று உள்ளனர். இங்கு 161,688,42 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

Bahrainல் 30% மக்கள் ஒரு ஊசியாவது பெற்று உள்ளனர் (1,700,000 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன).

கனடாவில் 15% மக்கள் ஒரு ஊசியாவது பெற்று உள்ளனர் (6,258,003 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன).

ஜேர்மனியில் 12% மக்கள் ஒரு ஊசியாவது பெற்று உள்ளனர் (14,374,088 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன).

இலங்கையில் 4.3% மக்கள் ஒரு ஊசியாவது பெற்று உள்ளனர் (923,954 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன).

ரஷ்யா: 5.2%, 12,038,859 ஊசிகள்
இந்தியா: 4.9%, 75,979,651 ஊசிகள்
ஜப்பான்: 0.7%, 1,096,698 ஊசிகள்
தாய்லாந்து: 0.2%, 180,477 ஊசிகள்
ஈரான்: 0.2%, 124,193 ஊசிகள்
வியட்நாம்: 0.1%, 52,335 ஊசிகள்

உலக அளவில் 4.6% மக்களே ஒரு ஊசியாவது பெற்று உள்ளனர். சீனா தரவுகளை வெளியிடவில்லை.