கள்ள நோக்கில் அமெரிக்கா மீண்டும் ஈரான் அணு ஒப்பந்தத்தில்?

Iran-Nuclear

ஒபாமாவின் அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து ஈரானுடன் அணு ஒப்பந்தம் (JCPOA) ஒன்றை 2015 ஆண்டு செய்திருந்தது. ஆனால் ஒபாமா மீதோ காழ்ப்பு கொண்ட ரம்ப், தான் பதவிக்கு வந்த பின், அந்த ஒப்பந்தம் தரம் குறைவானது என்று கூறி 2018 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருந்தார். வெளியேறிய பின் ஈரான் மீது கடுமையான தடைகளையும் ரம்ப் அரசு விதித்தது.
.
அலசி ஆராயாது முடிவெடுக்கும் ரம்பும், அவரது அதிகாரிகளும் தற்போது புதியதொரு இடருக்குள் செல்லவுள்ளார். 2015 ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வரும் அக்டோபர் மாதம் முதல் ஈரான் மீது ஐ.நா. நீண்டகாலமாக கொண்டிருந்த ஆயுத விற்பனை தடை (arm embargo) தளர்த்தப்படும். அவ்வாறு ஆயுத விற்பனை தடை தளர்ந்த பின், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தமது ஆயுதங்களை ஈரானுக்கு விற்பனை செய்யவுள்ளன. அதையும் ரம்ப் அரசு விருப்பவில்லை.
.
ரம்ப் 2015 ஆம் ஆண்டு தன்னிசையாக வெறியேறி இருந்தாலும், ஈரான் உட்பட மற்றைய நாடுகள் தொடர்ந்தும் ஒப்பந்தத்தில் அங்கம் கொண்டிருந்தன. ரம்ப் எதிர்பார்த்தபடி அவர்கள் அமெரிக்கா வழியில் செல்லவில்லை. அதனால் ஐ.நா. விலும் அந்த ஒப்பந்தம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதன்படியே அக்டோபர் மாதம் ஈரான் மீதான ஆயுத விற்பனை தடைகள் நீக்கப்படவேண்டும்.
.
JCPOA ஒப்பந்தத்துக்கு வெளியே இருந்து அக்டோபர் மாதம் தளர்க்கப்படவுள்ள ஆயுத விற்பனை தடையை தடுக்க முடியாத ரம்ப் அரசு, தீடீரென மீண்டும் JCPOA ஒப்பந்தத்துள் நுழைந்து தடுக்க முயல்கிறது. முன் கூறியதை பின் மறுக்கும் இயல்பு கொண்ட ரம்பும் அவரது அதிகாரிகளும் தம் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவில்லை என்ற கருத்துப்பட தற்போது விளக்கங்கள் கூறி வருகின்றனர்.
.
ரம்ப் அரசின் இந்த அரசியல் திருவிளையாடலை ரஷ்யாவும், சீனாவும் எதிர்க்கும் என்றும் கூறப்படுகிறது.
.
நவம்பர் மாதம் அமெரிக்க சனாதிபதி தேர்தலும் வரவுள்ளது. அப்போது ரம்ப் இரண்டாம் தடவையும் சனாதிபதியாக வெல்லும் வாய்ப்பை கொண்டிருப்பாரா என்பதுவும் மேற்படி விசயத்தில் முக்கிய பங்கு வகிக்கும். ஒபாமாவின் உதவி சனாதிபதியாக இருந்த பைடென் (Biden) சனாதிபதியானால், 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வரும்.
.