காசுக்காக பொய் பிரச்சாரத்தில் கல்விமான்கள்

gebn-org

Coca-Colaவின் கைக்கூலிகளாக செயல்படும் சில கலாநிதிகள் பற்றிய கட்டுரை ஒன்றை New York Times பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.
.
அதிகமாக சுவையூட்டிய, அதிகூடிய calories கொண்ட Coca-Cola போன்ற பாணங்கள் உடல் பருமனை அதிகரிக்கின்றன என்ற கருத்தை மூடி மறைத்து பதிலாக போதிய உடல் பயிட்சிகள் இல்லாமையே உடல் பருமனை அதிகரிக்கின்றன என்ற கருத்தை மக்கள் மத்தியில் ‘விஞ்ஞான’ கருத்தாக பரப்ப சில கலாநிதிகளை பணம் கொடுத்து அமர்த்தியுள்ளது..
.
Steven N. Blair என்ற University of South Carolina விரிவுரையாளர், Gregory A. Hand என்ற West Virginia University School of Public Healthஇன் பீடாதிபதி, James O. Hill என்ற University of Colorado School of Medicine விரிவுரையாளர் ஆகியோரே இவ்வாறு பொய் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் Global Energy Balance Network என்ற அமைப்பை உருவாக்கி உலகம் முழுவதும் தமது பொய் பிரச்சாரத்தை முன்னெடுக்கு ஆரம்பித்துள்ளனர்.
.
2008 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் சுமார் US $4 மில்லியனை Coca-Cola விடம் இருந்து பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் தமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் gebn.org என்ற web pageஉம் Coca-Colaவின் உடைமையே என்று கூறப்பட்டுள்ளது. முதலில் இந்த தளத்துக்கும் Coca-Cola வுக்கும் இடையேயான தொடர்பு மறைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
.
கடந்த 20 வருடங்களில் அமெரிக்கரின் சுவையூட்டிய பாண கொள்வனவு 25% ஆல் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வருமானத்தை இழப்பதை தவிர்ப்பதற்கே இந்த பொய் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. இந்த உண்மைகளை வெளியிட்டவர்களில் ஒருவர் University of Ottawa விரிவிரையாளர் Dr. Yoni Freedhoff ஆவார்.

.