கிரேக்கம் நீங்கிய ஐரோப்பியம்?

GreeceEuro

ஐரோப்பிய ஒன்றியத்தின் 19 நிதி அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை மீண்டும் ஒருமுறை அவசரமாக கூட உள்ளார்கள். இந்த கூட்டத்தின் நோக்கம் bankruptcy ஆகவுள்ள கிரேக்கத்தை (Greece) பாதுகாக்க வழி செய்வதே. இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது.
.
நீண்ட காலமாக தமது வரவுகளுக்கு அப்பால் செலவுகளை செய்துவந்த கிரேக்கம் பெருமளவு கடனை IMF அமைப்பிடம் பெற்று வந்திருந்தது. அக்கடன்களின் ஒரு பகுதியான 1.6 பில்லியன் யூரோக்களை வரும் செவ்வாய்க்கிழமை கிரேக்கம் IMF இக்கு திருப்பி கொடுத்தல் வேண்டும். ஆனால் கிரேக்கத்திடம் அத்தொகை பணம் இல்லை.
.
IMF கடனை அடைக்க மேலும் கடனை எதிர்பார்க்கிறது கிரேக்கம். ஆனால் மேலும் கடனை வழங்கமுன் கிரேக்கத்தின் செலவுகளை கடுப்படுத்துமாறு நிபந்தனைகள் விதிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். அதை மறுக்கிறது கிரேக்கம்.
.
கிரேக்கத்தை அதன் பொருளாதார குறைபாடுகளில் இருந்து மீட்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 7.2 பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க முன்வந்திருந்தது. அக்கொடுப்பனவையும் ஐரோப்பியம் இப்போது இடைநிறுத்தி வைத்துள்ளது.
.
கிரேக்கம் bankruptcy அடைந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படலாம். அதையும் ஐரோப்பியம் விரும்பாது. அவ்வாறு கிரேக்கம் வெளியேறுவது ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனம் அடைய செய்யும்.
.
அத்துடன் ரஷ்யா கூட கிரேக்கத்துக்கு கடன் கொடுக்க முன்வரலாம். அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆபத்தானதாக அமையலாம். அதை தடுக்கவாவது ஐரோப்பியம் வளைந்து கொடுக்க முன்வரல்லாம். அதை அறிந்த கிரேக்கமும் ஐரோப்பியத்திடம் பிடுங்கி எடுக்க முன்வரலாம்.
 .