கொரோனாவால் Tokyo 2020 ஒலிம்பிக்கும் நிறுத்தப்படலாம்

 Olympics
உலகம் எங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக Tokyo நகரில் இடம்பெறவுள்ள இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தப்படலாம் என்று ஒலிம்பிக் அதிகாரி Dick Pound கூறியுள்ளார்.
.
Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளன. இதில் சுமார் 11,000 போட்டியாளர் பங்கு கொள்வர்.
.
ஆனால் இந்த போட்டிகள் பெரும் திரளான பார்வையாளர் பங்கு கொள்ளும் இடம் ஆகையால், கொரோனா வைரஸின் பாதிப்பு தொடருமானால், போட்டிகளை நிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என்று Pound கூறி உள்ளார்.
.
அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் போட்டிகள் நிறுத்தப்படுமா என்பது தெரிந்ததும் என்றும் Pound கூறியுள்ளார். ஆனாலும் போட்டியாளர்களை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுமாறும் அவர் கூறியுள்ளார்.
.
1940 ஆண்டு Tokyo ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான்-சீனா யுத்தம் காரணமாகவும், பின் இடம்பெற்ற இரண்டாம் உலக யுத்தம் காரணமாகவும் நிறுத்தப்பட்டு இருந்தது.
.