கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா

SerumIndia

பிரித்தானியாவின் University of Oxford தற்போது கொரோனா தடுப்பு மருந்து (vaccine) ஒன்றை மருத்துவ பரிசோதனை (clinical trial) செய்து வருகிறது. அந்த தடுப்பு மருந்து தற்போதும் ஆய்வு நிலையில் இருந்தாலும், இந்தியாவின் மிக பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான Serum Institute of India சுமார் 60 மில்லியன் குளிசைகளை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது.
.
Oxford ஆய்வாளர்கள் முதலில் பரிசோதனையில் உள்ள இந்த மருந்தை 6 macaque குரங்குகளுக்கு வழங்கினார். பின்னர் அந்த குரங்குகளுக்கு கொரோனா வைரஸை பரவ வைத்தனர். ஆனால் 28 நாட்களாக கொரோனா வைரஸ் மேற்படி குரங்குகளை தொற்றவில்லை.
.
பிரித்தானியாவில் உள்ள இரண்டு கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மருந்து செலுத்தப்பட்டு, ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
.
பரிசோதனையில் உள்ள தடுப்பு மருந்தில் கொண்ட நம்பிக்கை காரணமாகவே இந்திய நிறுவனம் பெரும் தொகை குளிசைகளை தயாரிக்க முன்வந்துள்ளது. பரிசோதனையின் இறுதியில் இந்த மருந்து அரசுகளின் அங்கீகாரம் பெற தவறின், தயாரிக்கப்படும் குளிசைகள் விரையமாகும்.
.
உலகம் எங்கும் தற்போது சுமார் 100 தரப்புகள் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க முனைகின்றன. அவற்றுள் குறைந்தது 5 மருந்துகள் cilical trial மடத்தில் உள்ளன.
.
Serum தயாரிக்கும் மருந்து ஒன்றி விலை சுமார் $14.70 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசுகள் அதை மக்களுக்கு இலாசவமாக வழங்கலாம்.
.