சந்திரனில் கொடி நடும் இரண்டாம் நாடு சீனா

சந்திரனில் கொடி நடும் இரண்டாம் நாடு சீனா

சந்திரனில் தமது தேசிய கொடியை நடும் இரண்டாவது நாடாக சீனா அமைத்துள்ளது. இன்று வியாழன் சீனாவின் Chang’e-5 சீன தேசிய கொடியை (2 m நீளம், 90 cm உயரம்) சந்திரனில் நாட்டி உள்ளது. 1969 ஆண்டு அமெரிக்காவின் Apollo 11 பயணத்தின்போது முதலாவது அமெரிக்க தேசிய கொடி சந்திரனில் நடப்பட்டது. இதுவரை அமெரிக்கா 6 கொடிகளை அங்கு நட்டு உள்ளது.

தற்போது சந்திரனில் தரை இறங்கி, கல் மற்றும் மண் எடுத்து மீண்டும் பூமிக்கு வரும் முயற்சியில் சீனா ஈடுபட்டு உள்ளது. சந்திரனில் தரை இறங்கி கல், மண் மாதிரிகளை எடுத்துள்ளது Chang’e-5. பின் கொடியை நட்ட Chang’e-5 சந்திரனில் இருந்து மேலேறி உள்ளது.

மேலேறும் Chang’e-5 தற்போது சந்திரனை சுற்றிக்கொண்டு இருக்கும் கலத்துடன் மீண்டும் இணையும். அவை பின் பூமிக்கு திரும்பி Inner Mongolia பகுதியில் விழும்.

சீனா ஏற்கனவே சந்திரனில் எடுத்த வண்ண படம் ஒன்றை பகிரங்கப்படுத்தி உள்ளது.