சந்திரனில் ரஷ்யா சீனா இணைந்த ஆய்வுகூடம்

சந்திரனில் ரஷ்யா சீனா இணைந்த ஆய்வுகூடம்

ரஷ்யாவும் சீனாவும் இணந்து சந்திரனில் ஆய்வுகூடம் ஒன்றை அமைக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவின் Roscosmos அமைப்பும் சீனாவின் National Space Administration அமைப்பும் இணங்கி உள்ளன. செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

International Lunar Research Station (ILRS) என்ற இந்த ஆய்வுகூடம் சந்திரனின் விண்ணில் அல்லது நிலத்தில் அமையலாம். சாதகமான நிலை ஏற்படின் சந்திரனின் விண்ணிலும், நிலத்திலும் இரண்டு ஆய்வு கூடங்கள் அமையலாம். இந்த ஆய்வு கூடம் (அல்லது கூடங்கள்) மற்றைய நாடுகளின் பயன்பாட்டுக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ரஷ்யா விண்ணுக்கு மனிதனை அனுப்பி 60 ஆண்டுகளின் பின் மேற்படி முயற்சியில் ரஷ்யா ஈடுபடுகிறது. 1961ம் ஆண்டு ரஷ்யா முதலில் மனிதனை விண்ணுக்கு அனுப்பி இருந்தது. ரஷ்யாவிடம் அறிவி மிகை என்றாலும், தனித்து செயற்பட பொருளாதாரம் இல்லை.

அதேவேளை அமெரிக்கா Artemis என்ற புதிய திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டு அளவில் சந்திரனுக்கு மீண்டும் செல்லவுள்ளது.