சந்திர கலத்துடனான தொடர்பை இழந்தது இந்தியா

ISRO

சந்திரனில் மெதுவாக தரையிறங்கும் நோக்கில் ஏவிய Chandrayaan-2 என்ற தனது சந்திர கலத்துடனான தொடர்புகளை இந்தியா இழந்துவிட்டது என்று இந்தியாவின் விண்ணாய்வு நிலையம் ISRO அறிவித்துள்ளது. அந்த கலத்துடனான தொடர்பை இழந்தது நிரந்தரமானதா அல்லது மீட்கப்படக்கூடியதா என்று இந்திய இதுவரை அறிவிக்கவில்லை.
.
சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 2.1 km உயரத்தில் கலம் உள்ளபோதே தொடர்புகள் அற்று போயின. அதுவரை கலத்துடனான தொடர்புகள் நலமாக இருந்துள்ளன.
.
சந்திரனில் மோதாது, மெதுவாக தரையிறங்கும் (soft landing) இந்தியாவின் முதல் முயற்சி இதுவே. மனிதரை சந்திரனுக்கு அனுப்புவதாயின், மெதுவாக தரையிறங்கும் வல்லமை இந்தியா கொண்டிருக்க வேண்டும். இந்தியாவின் இன்னோர் கலம் முன்னர் சந்திரனில் மோதி தரையிறங்கியுள்ளது.
.
தரை இறக்கம் நலமாக இருந்திருந்தால், சுமார் 27 kg எடை கொண்ட Pragyan என்ற சந்திர வாகனம் (moon rover) 14 நாட்களுக்கு அரை km தூரம் பயணித்த தவுகளை அனுப்பி இருக்கும்.
.
இந்த மெதுவான சந்திர தரையிறங்கல் (soft landing) முயற்சிக்கு இந்தியா சுமார் $125 மில்லியன் செலவு செய்திருந்தது.
.