சார்க் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளா

SAARC

அடுத்த மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில், பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என்று இந்திய வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆயுத குழு ஒன்று இந்திய படை முகாம் ஒன்றை தாக்கி 18 படையினரை கொலை செய்ததன் காரணமாகவே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
.
இடம்பெறவுள்ள மாநாடு 19வது சார்க் மாநாடாகும். இந்தியா போல் ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் பங்கு கொள்வதை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனைய சார்க் நாடுகள் இலங்கை, நேபாளம், மற்றும் மாலைதீவு ஆகும்.
.

அதேவேளை இந்தியா இந்துநதி மற்றும் Chenab, Jhelum நதிகளில் இருந்து அதிக அளவு நீரை வழிமறிக்கப்போவதாக கூறியுள்ளது. 1960 ஆண்டு உலக வங்கியின் தலைமையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி (Indus Water Treaty) இந்தியா 20% நீரை இந்துநதியில் இருந்து வழிமறிக்கலாம். இமாலயத்தில் ஆரம்பிக்கும் இந்த மூன்று நதிகளும் முதலில் இந்தியா ஊடு சென்று பின் பாகிஸ்தான் ஊடு சென்று கடலில் வீழ்கின்றன.
.
இந்தியா அதிக நீரை வழிமறித்தால் அது பாகிஸ்தானின் விவசாயத்தை பெரிதும் பாதிக்கும். அவ்வாறு இந்தியா செய்தால் அது பாகிஸ்தான் மீதான யுத்தமாக பாகிஸ்தான் கருதும் என்றுள்ளது பாகிஸ்தான்.
.