சிம்பாப்வே நாணயம் இடைநிறுத்தம்

Zimbabwe

சிம்பாப்வே (Zimbabwe)  நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டு நாணயமான Zimbabwe Dollar ஐ பாவனையில் இருந்து நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் சிம்பாப்வே நாணயம் வைத்திருப்போர் அவற்றை அமெரிக்க டொலருக்கு மாற்றம் செய்தல் வேண்டும். இந்த நாட்டின் மீது மற்றைய நாடுகள், குறிப்பாக மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையே அவர்களின் நாணய வீழ்ச்சிக்கு காரணம்.
.
இதன்படி 175 quadrillion (ஆயிரம் மில்லியன் மில்லியன் அல்லது 1,000,000,000,000,000) சிம்பாப்வே டொலர் வைத்திருப்போருக்கு U$ 5.00 வழங்கப்படும். அதற்கு மேலே வைத்திருப்போருக்கு 35 quadrillion சிம்பாப்வே டொலரருக்கு U$ 1.00 வீதம் வழங்கப்படும்.
.
அங்கு அதிகூடிய அச்சடிக்கப்பட்ட பண தாளின் பெறுமதி 100 ட்ரில்லியன் சிம்பாப்வே டொலர் ஆகும். ஒரு பஸ்ஸில் பயணம் செய்யக்கூட அப்பெறுமதி போதியதல்ல.
.

இந்நாடு வளங்கள் பல உள்ள நாடு என்றாலும் கறுப்பின ஜனாதிபதி Robert Mugabe யின் காணி திருத்த சட்டம் காரணமாக மேற்கு நாடுகள் பொருளாதார தடையை விதித்தன. காணி திருத்த சடத்தின் கீழ் அந்நாடு வெள்ளையர் உரிமை கொண்டிருந்த பெரும் கம நிலங்கள் பறித்து எடுக்கப்பட்டு அரச சார்பு கறுப்பு இனத்தவரிடம் கொடுக்கப்பட்டு இருந்தது.