சிரியாவின் ஒருமைக்கு ரஷ்யா, ஈரான், துருக்கி ஆதரவு

Syria

சிரியாவின் ஒருமைபாடு சிதைந்து, அந்நாடு பல துண்டங்களாக உடையாமல் இருப்பதை உறுதி செய்ய தாம் ஆவண செய்யவுள்ளதாக ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இன்று கூறி உள்ளன. துருக்கியின் அன்கரா (Ankara) நகரில், அந்நாடு ஜனாதிபதி Erdogan மற்றும் அங்கு பயணத்தை மேற்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி Putin, ஈரானிய ஜனாதிபதி Rouhani ஆகியோர் இந்த இணக்கத்தை அறிவித்து உள்ளனர்.
.
ரஷ்யாவும், ஈரானும் இதுவரைக்காலம் சிரியாவின் ஜனாதிபதி al-Assad க்கு ஆதரவு வழங்கி வந்திருந்தாலும், துருக்கி அங்கு யுத்தம் செய்து வந்த சில அரச எதிர்ப்பு ஆயுத குழுக்களுக்கே ஆரவு வழங்கி வந்திருந்தது. ஆனால் அந்த ஆயுத குழுக்கள் தற்போது பெருமளவில் பலமிழந்து உள்ளன.
.
அதேவேளை அமெரிக்கா தனது சிறிய அளவிலான படைகளை விரைவில் சிரியாவில் இருந்து மீள பெறும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க படை அங்கு IS இருந்த குழுவை அழிக்கவே நிலைகொண்டு இருந்தது. ஆனால் அமெரிக்காவின் உள்நோக்கம் கூடவே சிரியாவில் பிரிவினைக்கான போராடும் Kurdish குழுக்களுக்கும் ஆதரவு வழங்குவது.
.

அந்நியரால் ஆரம்பிக்கப்பட்ட சிரியாவின் யுத்தத்துக்கு சுமார் 400,000 உயிர்கள் பலியாகின.
.