சிரியாவின் கோலான் இஸ்ரேலின் சொத்து என்கிறார் ரம்ப்

Golan

1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்து கொண்ட சிரியாவின் கோலான் பகுதியை (Golan Heights) இன்று திங்கள் ரம்ப் அரசு இஸ்ரேலின் சொத்து என்று கூறியுள்ளது. ஐ.நா. உட்பட உலகம் எங்கும் கோலன் பகுதியை சிரியாவின் உடமை என்று கூறினாலும், அமெரிக்காவின் பலத்தில் கோலான் இஸ்ரேல் உடமையாகிறது.
.
1981 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேல் கோலானை தனது உடமை என்று சட்டம் இயற்றி இருந்தாலும், ரம்ப் ஆட்சிவரை அமெரிக்கா அதை ஏற்கவில்லை. ஆனால் கண்மூடித்தனமாக இஸ்ரேல் பக்கம் சாயும் ரம்ப்  இன்று இஸ்ரேலின் கோலான் உரிமைக்கு ஆதரவு வழங்கி உள்ளார்.
.
ரஷ்யா அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. துருக்கி இந்த விடயத்தை ஐ.நா.வுக்கு எடுத்து செல்லவுள்ளதாக கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் தீர்மானம் 497 (Security Council Resolution 497) கோலான் பகுதியை சிரியாவின் உடமை என்றே கூறுகிறது.
.
சுமார் 1,200 சதுர km பரப்பளவு கொண்ட கோலானில் தற்போது 30 யூத குடியிருப்புகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சுமார் 20,000 யூதர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இதே பகுதியில் சுமார் 20,000 Druze அரபு மக்களும் வாழ்கிறார்கள். இவர்கள் சிரியாவின் குடியிருமை கொண்டவர்கள்.
.