சிரியாவில் அதிகரிக்கும் ரஷ்ய நகர்வு

Latkia

அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளும், அவர்களுடன் கூடிய சவுதி போன்ற மத்தியகிழக்கு நாடுகளும் சிரியாவின் தலைவர் அசாட் (Assad) அரசை கவிழ்த்து தமது பொம்மை அரசை அமைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிய, பக்க விளைவாக IS என்ற தீவிரவாத இஸ்லாமிய குழு பலம் கொண்டது. IS தனது பலத்தை ஈராக்குள்ளும் செலுத்த ஈராக் ஈரானின் உதவியை நாடியது. இப்போது ரஷ்யாவும் களத்தில் குதித்துள்ளது. இதனால் சண்டையை ஆரம்பித்த நாடுகள் பின்தள்ளப்பட்டுள்ளன,
.
ஒரு மாதத்தின் முன் சிரியாவில் ரஷ்யாவின் யுத்த விமானங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது ரஷ்யாவின் SU-24, SU-25, மற்றும் SU-30 வகை யுத்த விமானங்கள் சிரியாவின் Latakia விமான தளத்தில் உள்ளதை செய்மதி படங்கள் காட்டியுள்ளன. இன்னுமொரு பத்திரிகை 1700 ரஷ்ய படைகள் சிரியாவில் உள்ளதாக கூறியுள்ளது.
.
ஈராக், ஈரான், சிரியா, ரஷ்யா ஆகிய நாட்கள் இன்று இணைந்து IS அழிக்கும் பணியில் செயல்படப்போவதாக கூறியுள்ளன. அதேவேளை அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி உட்பட பல மேற்கு நாடுகளும் இதே காலத்தில் IS க்கு எதிராகவும் அசாட் அரசுக்கும் எதிராகவும் யுத்தத்தில் உள்ளன.
.
இதேவேளை பிரித்தானியாவும் ஜெர்மனியும் அசாட் அரசை கவிழ்க்கும் முயற்சியை தற்போது கைவிட முன்வந்துள்ளதாக தெரிகிறது.
.