சிரியா போல் எரிய ஆரம்பித்துள்ள ஜெமென்

Yemen

ஜெமென் நாட்டின் வன்முறைகள் தற்போது மூன்று குழுக்களுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த மூன்று குழுக்களும் மூன்று வெளியார் குழுக்களின் கட்டுப்பாடில் உள்ளன. வெளியாரின் தலையீடு காரணமாக ஜெமென் நாடும் சிரியாவைப்போல் எரிய ஆரம்பித்துள்ளது.
.
ஒரு குழு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உதவியுடன் முன்னாள் ஜனாதிபதி Hadi இன் தலைமையில் இயங்கும் சுனி (sunni) இஸ்லாமியர். இவர்கள் பொதுவாக ஜெமென் நாட்டின் தென் பகுதியில் வாழ்பவர்கள். அவர்களை எதிர்த்து சண்டையிடும் அடுத்த குழு சியா (Shiite) இஸ்லாமியர். நாட்டின் வடபகுதியில் வாழும் இவர்களுக்கு உதவுவது ஈரான். இவர்கள் முன்னாள் ஜனாதிபதி Saleh வுக்கு ஆதரவானவர். இங்கு இயங்கும் மூன்றாவது குழு அல்கைடா சார்பு இயக்கம்.
.
அண்மை காலங்களில் ஈரான் சார்பு சியா குழு நாட்டின் வடபகுதி முழுவதையும் தம் கட்டுப்பாடில் கொண்டுவந்திருந்தது. அதன் ஒருபடியாக தலைநகர் Sanna வையும் தம் கட்டுப்பாடில் கொண்டுவந்தது. இதன் விளைவாக அப்போதைய ஜனாதிபதி Hadi தெற்கே உள்ள Aden நகர் சென்றார். ஆனால் சியா குழு படிப்படியா Aden வரை சென்றது.
.
Hadi தலைமையிலான சுனி இஸ்லாமியரின் வீழ்சியை சகிக்காத சவுதி தமது விமானங்களை சியா குழு மீது ஏவியது. அத்துடன் சுனி குழுவுக்கு தேவையான ஆயுதங்களையும் வழங்க ஆரம்பித்தது.
.
இதற்கிடையே அல்கைடா சார்பு குழுவும் பல தாக்குதல்களை செய்து வருகிறது. இவர்கள் பொதுவாக சுனி இஸ்லாமியரே.
.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 519 உயிர்கள் பலியானதாகவும் 1700 நபர்கள் காயமடைந்ததாகவும் UN கூறியுள்ளது.