சிரியா யுத்தத்துக்கு ரஷ்யாவின் படைகள்?

Syria

மேற்கு நாடுகளும் சவுதி, கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் எரித்துக்கொண்டு இருக்கும் சிரியாவுள் இப்போ ரஷ்யாவும் நுழைகிறது. அதற்கு அமெரிக்காவும் NATO உட்பட ஐரோப்பிய நாடுகளும் கடும் விசனம் தெரிவித்துள்ளன. தம்மால் தான் இந்த யுத்தம் உருவாக்கப்பட்டது என்பதையும் மறந்து ரஷ்யா சமாதானம் ஏற்படுவதை தடுக்க முனைவதாக அழுகின்றன.
.
சில தினங்களுக்கு முன் ரஷ்யா தனது ஆதரவு நாடான சிரியா அரசுக்கு உதவும் பொருட்டு ஒருதொகை ஆயுதங்களை சிரியா நோக்கி நகர்த்தி இருந்தது. அந்த நகர்வுக்கு பயன்பட Greece மற்றும் Bulgaria போன்ற நாடுகளின் மேலாக ரஷ்யா விமானங்கள் பறக்க அனுமதியும் கேட்டிருந்தது. Bulgaria அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தும் இருந்தது.
.
இன்று NATO செயலாளர் Jens Stoltenberg ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளையிட்டு கவலை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். அமரிக்காவின் வெளியுறவு செயலாளர் John Kerryயும் ரஷ்யாவின் வெளுயுறவு அமைச்சரிடம் தனது விசனத்தை தெரிவித்துள்ளார்.
.
மேற்கும் சவுதி போன்ற சில மத்திய கிழக்கு அரசுகளும் தமக்கு ஆதரவு வழங்காத சிரியாவின் தலைவரை (Bashar Al-Assad) நீக்கி பதிலாக தமக்கு ஆதரவான அரசை அமைக்கும் நோக்குடன் சிரியாவுள் யுத்தத்தை ஆரம்பித்திருந்தன. அனால் பதிலாக அங்கு IS என்ற இஸ்லாமிய கடும்போக்கு இயக்கம் ஆதிக்கம் கொண்டு வளர்ந்து அது மேற்கு நாடுகளுக்கு ஆபத்தாகி விட்டது.. இப்போ IS ஐ முதலில் அழிக்கும் முயற்சியில் உள்ளனர் மேற்கு அரசுகள்.
.
கடந்த 4.5 வருட யுத்தத்தில் சுமார் 250,000 உயிர்கள் வரை இங்கு பலியாகி உள்ளன. அத்துடன் பெருமளவு அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி படை எடுத்துள்ளனர்.
.
ரஷ்யாவின் இராணுவ வருகை சிரியாவின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமா அல்லது எல்லாரையும் உள் இழுத்து Cold-war யுத்தங்கள் போல் இழுபடுமா? அகதிகள் படையெடுப்பு காரணமாக ஐரோப்பா இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர எத்தனிக்கும்.
.
சிரியாவின் Mediterranean கடல் கரையோரம் உள்ள Tartous நகரில் ரஷ்யாவுக்கு சொந்தமான கடல்படை தளம் ஒன்றும் உண்டு.
.