சிரிய யுத்தவிமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா

Syria

சிரியாவில் IS குழுவுக்கு எதிராக யுத்தம் செய்யும் அமெரிக்காவின் யுத்த விமானம் ஒன்று சிரியாவின் யுத்த விமானம் ஒன்றை இன்று ஞாயிறு சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக போராடும் ஆயுத குழுக்கள் மீது சிரியாவின் யுத்த விமானம் தாக்கியது என்று கூறியே அமெரிக்கா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.
.
சிரியாவின் ராக்கா (Raqqa) பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. அதேவேளை தமது விமானப்படை IS குழுவுக்கு எதிராக போராடும் போதே அமெரிக்காவின் படை இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது என்கிறது சிரியா.
.

தாம் தமது அணிக்கு உதவியாக போராடும் குழுக்களை பாதுகாக்கவே சிரியாவின் விமானம் மீது தாக்கியதாக அமெரிக்க பின்னர் கூறியுள்ளது. அத்துடன் அமெரிக்கா சார்பு அணி சிரியாவுடனோ அல்லது ரஷ்யாவுடனோ சண்டையை விருப்பவில்லை என்றும், ஆனால் தேவைப்பட்டால் தம்மை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா தயங்காது என்றும் அமெரிக்கா படை அலுவலகம் கூறி உள்ளது.
.