சீனாவின் முதலாவது கனரக விமானம் Yun-20

சீனா தனது முதாவது கனரக விமானத்தை வெற்றிகரமாக வெள்ளோட்டம் செய்துள்ளது. Yun-20 என்ற 47 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானம் தொடர்ச்சியாக 7800 km வரை 60 தொன் சுமையை எடுத்து செல்லக்கூடியது. இந்த விமானம் அமெரிக்காவின் C-17 விமானத்துக்கு நிகரானது.அமெரிக்கா, ரஷ்யா, உக்கிரேன், ஆகிய மூன்று நாடுகளுக்கும் அடுத்ததாக சீனாவே இப்போது இவ்வகை விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. உக்கிரேனின் விமானக்கள் USSR காலத்து செயல்பாடுகளின் அபிவிருத்தியுன் அடிப்படையில் அமைந்தது.

சீனா படிப்படியாக Boeing, AirBus போன்ற வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனக்களில் தங்கி இருப்பதை குறைக்க முயல்கிறது. முதலில் யுத்த விமானக்களில் மட்டும் கவனம் செலுத்திய சீனா இப்போது பயணிகள் மற்றும் பொதி சுமக்கும் விமானக்களிலும் கவனம் செலுத்துகிறது. சீனா தற்போது 190 பயணிகள் வரை செல்லக்கூடிய C 919 விமான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. அதிகப்படியான சீன விமானக்கள் சீன விமான சேவை நிறுவனங்களாலேயே கொள்வனவு செய்யப்படுகிறது. சிறிய அளவு விமானங்களே வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தரவு, படம்: Xinhua