சீனாவில் உலகப்பெரிய தரை-கடல் விமானம்

AG600

இன்று ஞாயிரு சீனா தனது AG600 என்ற தரையிலும், கடலிலும் இறங்கி ஏற்கக்கூடிய விமானத்தை (amphibious aircraft) வெள்ளோட்டம் விட்டுள்ளது. தற்போது தரையிலும், கடலிலும் இறங்கி ஏறக்கூடிய மிக பெரிய விமானம் இதுவே. சீனாவின் Zhuhai என்ற நகரத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் பறந்துள்ளது.
.
இந்த விமானம் சுமார் 37 மீட்டர் நீளம் கொண்டது. இந்த விமானத்தின் இறக்கைகளின் அந்தங்களுக்கு இடையிலான தூரம் 38.8 மீட்டர். சுமார் 50 பேர்களை காவக்கூடிய இந்த விமானம் 95% சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகங்களை கொண்டது.
.
சீனா தென் சீன கடலில் உருவாக்கி வரும் செயற்கை தீவுகளை சீனாவுடன் இணைக்க இந்த விமானம் பெரிதும் பயன்படலாம். அங்கங்கு அமைக்கப்படும் சிறிய தீவுகளில் விமான ஓடுபாதை அமைப்பது இயலாத காரியம். ஆனால் AG600 வகை விமானம் அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும்.
.
சுமார் 12 தொன் நீரை அள்ளி சென்று வீசக்கூடிய இந்த விமானம் தீ அணைக்கும் பணிகளுக்கும் நன்கு பயன்படும்.
.
சிறு தீவுகளுக்கு பெருமளவு பயணிகளை ஏற்றி செல்லக்கூடியமை, இராணுவத்தை நகர்த்தக்கூடியமை, தீயணைப்புக்கு பயன்படக்கூடியமை போன்ற காரணங்களால் நியூசீலாந்து, மலேசியா ஆகிய நாடுகள் ஏற்கனவே கொள்வனவு செய்யும் விருப்பத்தை தெரிவித்து உள்ளன.
.