சீனாவில் நகரங்களை ஆக்கிரமித்துள்ள யானைகள்

சீனாவில் நகரங்களை ஆக்கிரமித்துள்ள யானைகள்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள Yunnan மாகாணத்தில் 15 யானைகளை கொண்ட கூட்டம் ஒன்று நகரங்கள் பலவற்றுள் நுழைந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. போலீசாரும், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் அவற்றை பின் தொடர்கின்றனர். அவர்கள் அட்டகாசம் செய்வது, பயிர்ச்செய்கைகளை உண்பது, உறங்குவது எல்லாம் இணையம் மூலம் மக்கள் தொடர்ந்தும் காண்கின்றனர். இந்த கூட்டத்தில் உள்ள 3 குட்டிகளே மக்களின் ஆவலை அதிகரித்து உள்ளன.

இவை தற்போது 7 மில்லியன் மக்கள் வாழும் Kunming நகருக்கு அண்மையில் உள்ளன.

கடந்த ஆண்டு தமது காடுகளை விட்டு ஏதோ காரணத்தால் வெளியேறிய இந்த கூட்டம் தற்போது சுமார் 500 km பயணித்து உள்ளன. அரசு இந்த கூட்டத்தை drones மூலம் கண்காணித்து வருகின்றது. இவை மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வரும் வேளை, மக்கள் மறைந்து கூட்டத்துக்கு வழிவிடுகின்றனர். வீதிகளுக்கு குறுக்கே பார வாகனங்களை நிறுத்தி அவற்றின் வழியை திருப்ப போலீசார் முனைகின்றனர்.

ஆரம்பத்தில் 16 யானைகள் காட்டை நீங்கி இருந்தன. ஆனால் ஒன்று திரும்பி காட்டுக்கு சென்றுள்ளது. அதேவேளை இன்னோர் குட்டி பிறந்து கூட்டத்தின் தொகை 16 ஆக உள்ளது. அதில் 6 பெண் யானைகளும், 3 ஆண் யானைகளும் உள்ளன.

சீனாவில் சுமார் 300 யானைகள் மட்டுமே உள்ளன. அவை பர்மா, லாஒஸ், வியட்நாம் எல்லையோரம் வாழ்கின்றன. சீனாவின் ஏனைய பகுதிகள் யானைகளுக்கு சாதகமானவை அல்ல. சீனா யானைகளுக்கு அதிஉயர் பாதுகாப்பு வழங்குகிறது.

இவை ஏன் காட்டை விட்டு வெளியேறின என்பது அறியப்படவில்லை என்றாலும், காடுகள் அழிக்கப்படுவது யானைகள் உணவை தேடி நகரங்களுக்கு படையெடுக்க காரணமாகலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் சிலர் அந்த யானைகள் தமது தலைமை யானையை இழந்து இருக்கலாம் என்று நம்புகின்றனர்.