சீனாவில் மில்லியன் ஆண்டுகள் பழைய மனித எலும்பு

சீனாவில் மில்லியன் ஆண்டுகள் பழைய மனித எலும்பு

சீன அகழ்வாளர் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமை கொண்ட எலும்புக்கூடு ஒன்றை கண்டெடுத்து உள்ளனர். இந்த எலும்புக்கூடு சீனாவில் எடுக்கப்பட்ட ஏனைய எலும்புக்கூடுகளுடன் இணக்கம் கொள்கிறது.

மேற்படி எலும்புக்கூடு Hubei மாநிலத்தில் உள்ள Yun (Yunxian) என்ற இடத்தில் இருந்துள்ளது. இவ்விடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரும் சில எலும்புக்கூடு பகுதிகள் இருந்தன. ஆனால் தற்போது அறியப்பட்ட எலும்புக்கூடே முழுமையானது. தற்போது இதன் தலை பகுதி மட்டுமே அகழ்வு செய்யப்பட்டு உள்ளது என்றும், முழுமையான அகழ்வு நவம்பர் மாதம் அளவில் நிறைவு பெறும்  என்றும் கூறப்படுகிறது.

நவம்பர் மாதம் இந்த எலும்புக்கூட்டின் உயரம், மூளையின் கனவளவு போன்ற மேலதிக விபரங்கள் அறியப்படும் என்றும் அகழ்வாளர் கூறியுள்ளனர்.

இந்த இடத்தில் யானை, குதிரை, மான், போன்ற மிருக எலும்புகள், கல் ஆயுதங்கள் ஆகியனவும் காணப்பட்டு உள்ளன.

இந்த எலும்புக்கூட்டுக்கு Yunxian Man என்று பெயரிடப்பட்டு உள்ளது.

சீனாவில் கண்டெடுக்கப்பட்ட  எலும்புக்கூடுகள்:

Yuanmou Man: 1.7 மில்லியன் ஆண்டுகள் பழையது (அகழ்வு ஆண்டு: 1965)

Lantian Man: 1.6 மில்லியன் ஆண்டுகள் பழையது (அகழ்வு ஆண்டு: 1963)

Yunxian Man: 1 மில்லியன் ஆண்டுகள் பழையது

Peking Man: 780,000 ஆண்டுகள் பழையது (அகழ்வு ஆண்டு: 1921)

படம்: CCTV